இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுடிதார் அணிந்து வந்த இளம் பெண் ஒருவர் கருப்பு நிறத்தில் 50 மில்லி பெயிண்ட் வாங்கி வந்து நடிகர் விஜய்யின் முகத்தில் பூசினார். இதனை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்து, தகவலறிந்ததும் தமிழக வெற்றி கழகத்தினர் திரண்டு வந்தனர். அதற்குள் அந்த இளம் பெண் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து தமிழக வெற்றி கழகத்தினர் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குபதிவு செய்து நடிகர் விஜய் முகத்தில் பெயிண்ட் பூசிய இளம் பெண் குறித்து விசாரணை நடத்தி அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கூடுவாஞ்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post சுவர் விளம்பரத்தில் இருந்த நடிகர் விஜய் முகத்தில் கருப்பு நிற பெயிண்ட் பூசிய பெண்: கூடுவாஞ்சேரியில் பரபரப்பு appeared first on Dinakaran.