மறைமலைநகரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

 

செங்கல்பட்டு, மார்ச் 24: மறைமலைநகர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் சமய்சிங் மீனா சாலை பாதுகாப்பு குறித்து பேசினார்.

நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. விபத்தில் இருந்து நம்மை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டும். அதற்கு நாம் கட்டாயம் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயம் இருவருமே தலைக்கவசம் அணிய வேண்டும். பைக்கில் இரண்டு பேருக்கு மேல் செல்லக்கூடாது. செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டக்கூடாது. 19 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சிறுமிகள் பைக் ஓட்டக்கூடாது. அப்படி சிறுவர், சிறுமிகள் பைக் ஓட்டும் பட்சத்தில் அவர்களது பெற்றோர் மீது வழக்கு பதியப்படும்.

அதேபோல, நான்கு சக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் ஓட்டுனர் பயணிக்கும் நபர்கள் அனைவரும் சீட்பெல்ட் அணியவேண்டும் என பேசினார். இந்நிகழ்வில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் 100பேருக்கு ஹெல்மெட் வழங்கி அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இதில், போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என ஏராளமோனோர் கலந்து கொண்டனர்.

The post மறைமலைநகரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: