மேலும், முதியோர்களுக்கான ரயில்வே துறை 50 சதவீத கட்டணத்தை ஒன்றிய அரசு ரத்து செய்து இருக்கிறது. அதை போக்கும் வகையில் அன்புச்சோலை திட்டத்தையும் நமது முதல்வர் செயல்படுத்தி உள்ளார். பள்ளி மாணவர்களுக்கு கணினி வழங்க வேண்டியது தானே என்று கேட்கிறார்கள். அவர்கள் கணினி பயன்படுத்த வேண்டிய வயதில் வழங்குவார்கள். ஆனால், அதற்கு முன்னதாக ஸ்மார்ட் கிளாஸ் மூலம் செயல்படுத்தி இருக்கிறார்கள். வீட்டுமனை பட்டா என்பது ஒவ்வொருவரின் பெரும் கனவு, பட்டாவிற்காக காத்திருந்த காலங்களும் உண்டு. இதுவரை, 10 லட்சம் பட்டாக்களை வழங்கி இருக்கிறார்கள். இன்னும், கூடுதலாக 5 லட்சம் பட்டாக்களை வழங்க உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில், சென்னை ஒட்டி உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெல்ட் ஏரியா எனப்படும் பகுதிகளிலும் பட்டா வழங்க அரசு உத்தரவு வழங்க இருக்கிறது. இதன்மூலம், ஏழைகளின் வயிற்றில் நமது முதல்வர் பால் வார்த்தை இருக்கிறார். கல்வி மேம்படுத்தும் வகையில், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 52 சதவீதம் சொல்லக்கூடிய அளவில் இலக்கை அடைந்து, முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. புதிய புதிய முயற்சிகளை மிக அவசியமான தகவல் தொழில்நுட்பத்துறையில் முதல்வராக இருந்த கலைஞர், டைட்டில் பார்க் என்னும் தகவல் தொழில்நுட்ப துறையில் ஒரு மைல்கல் அரங்கேற்று இருக்கிறார் என்பதை நாடறியும். அயல்நாடுகளில் பார்க்கக்கூடிய ஒன்றை இன்றைக்குத் தமிழ்நாட்டிலேயே காணத் தொடங்கியிருக்கிறோம். தனியார் வசம் இருந்ததை தற்போது அரசிடம் காணத் தொடங்கியிருக்கிறோம். முதல்வர் படைப்பகம் என்பது தொடங்கப்பட்டிருக்கிறது. அதன்படி, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தொடங்கப்பட்டது.
தற்போது, தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது எதைக் காட்டுகிறது என்று யாராவது பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். நீங்கள் இப்பொழுதே website-ல் CM Spaces என்று தேடிப்பாருங்கள். அவ்வாறு பார்த்தால் நீங்களே செய்துகொள்ளலாம் என்று வருகிறது. அங்கே படிக்கக்கூடியவர்களுக்கும், வேலை செய்யக்கூடியவர்களுக்கும் என்று ஒன்று இருக்கிறது. அரை நாள் வேண்டுமென்றால் 50 ரூபாய், ஒரு நாள் வேண்டுமென்றால் 100 ரூபாய். Air conditioning செய்யப்பட்டு, wi-fi facility-யோடு அங்கிருக்கக்கூடிய computer என அனைத்தையும் பயன்படுத்தக்கூடிய ஒரு வசதி. இது அயல்நாடுகளில் இருக்கக்கூடியது. தற்போது தமிழ்நாட்டிலும் ஏற்படுத்தப்படுகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இதுபோன்ற வசதிகளை தமிழ்நாட்டில் கட்டமைக்கக்கூடிய ஒன்றாக, ஒரு முற்போக்குச் சிந்தனையைக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சியைத்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
தற்போது வழங்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை என்பது முன்னேற்றத்திற்கான பார்வைக்கானது மட்டுமல்லாமல், இந்த ஆட்சி என்பது, தமிழ் மணம், தமிழர்களின் மண், இந்த இனம், மொழி, பண்பாட்டைக் காக்கக்கூடிய ஆட்சி என்பதை எதிரொலிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் அவையினால் அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகளின் அலுவல் மொழியாக இருக்கக்கூடிய அத்தனை மொழிகளிலும் திருக்குறள் மொழியாக்கம் செய்யப்படுகிறது என்கிற ஓர் உன்னத அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. புதைந்துபோய் இருக்கக்கூடிய தொன்மைகளையெல்லாம் அகழாய்வு செய்து, தற்போது பூமிக்கு வெளியில் நாம் கொண்டு வந்திருக்கிறோம். இந்த ஆட்சியின் கடைசி நிதிநிலை அறிக்கை என்று யாராவது சொல்வேராயின் இல்லை, அடுத்து அமையப் போகின்ற அரசிற்கான நிதிநிலை அச்சாரமிடுகிற முதல் நிதிநிலை அறிக்கை என்பதை பிரகனப்படுத்தி கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
The post கல்வி மேம்பாட்டில் 52 சதவீதம் இலக்கை அடைந்து இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது: சட்டப்பேரையில் காஞ்சி எம்எல்ஏ எழிலரசன் பேச்சு appeared first on Dinakaran.