முதல்வர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்; திமுகவின் ஆட்சியில் பெண்களின் கல்வி, வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது: எம்எல்ஏ சுந்தர் பேச்சு

மதுராந்தகம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், சித்தாமூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நுகும்பல் கிராமத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சிற்றரசு தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பொன்முத்து ராமலிங்கம், ராஜேஷ், அசோக்குமார், புஷ்பலிங்கம், பாரத், வெங்கடேசன், விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம், இளைஞர் அணி மாநில துணை செயலாளர் அப்துல் மாலிக், தலைமை பேச்சாளர் சிவா, தொகுதி பொறுப்பாளர் இசை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ பேசுகையில் தமிழ்நாட்டில் திமுக கட்சியின் நான்காண்டு ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம் தற்பொழுது அறிவித்துள்ள பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் ஒரு சதவீதம் கட்டண சலுகை உள்ளிட்ட திட்டங்களால் மகளிர் பயன் பெற்றுள்ளனர்.தமிழ்நாட்டுப் பெண்கள் கல்வியிலும் வாழ்க்கை தரத்திலும் உயர்ந்த நிற்கின்றனர். மேலும் செய்யூர் தொகுதியில் புதிய அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, இதே பகுதியில் தொழில்பேட்டையும் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். ஆகவே, இந்த பகுதி மாணவ-மாணவிகள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு இதே பகுதியில் வேலைக்குச் சென்று பயனடையலாம் என்ற உன்னத நோக்கத்தில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.இதனைத் தொடர்ந்து 550 பெண்களுக்கு புடவை இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் இனியரசு, ஒன்றிய குழு பெருந்தலைவர் ஏழுமலை, துணை பெரும் தலைவர் பிரேமா சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், துணை அமைப்பாளர்கள் ஆண்டோ சிரில் ராஜ், பால்ராஜ், ,ஒன்றிய நிர்வாகிகள் வரதராஜன், முரளி, நிர்மல் குமார், ஜெயந்தி, ரமணய்யா, ஐயப்பன், சாந்தி ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

The post முதல்வர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்; திமுகவின் ஆட்சியில் பெண்களின் கல்வி, வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது: எம்எல்ஏ சுந்தர் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: