மதுரை: குறைந்த விலையில் தங்கக் கட்டி தருவதாக ரூ.48 லட்சம் மோசடி செய்த வழக்கில் ராஜபாளையத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரிடம் ரூ.48 லட்சம் மோசடி செய்த கருப்பையா (23), கண்ணன்(22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குறைந்த விலையில் தங்கக் கட்டிகள் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் வெளியிட்டு தங்கக் கட்டிகளை சோதனை செய்த பிறகு தருவதாக முத்துக்குமாரை நகைக் கடைக்கு அழைத்துச் சென்று மோசடி செய்துள்ளனர். தங்கம் மற்றும் ரூ.48 லட்சத்துடன் தப்பியோடிய மேலும் ஒருவரை ராஜபாளையம் வடக்கு காவல்துறை தேடி வருகிறது.
The post குறைந்த விலையில் தங்கக் கட்டி தருவதாக ரூ.48 லட்சம் மோசடி: 2 பேர் கைது appeared first on Dinakaran.