வையாளத்தூர் மேம்பாலத்தில் மின்விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி

நீடாமங்கலம், மார்ச் 20: நீடாமங்கலம் அருகே வையாளத்தூர் மேம்பாலத்தில் மின்விளக்குகளை எரியவிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் வையகளத்தூர் மேம்பாலம் உள்ளது. இந்த வழியாக வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருவாரூர், நீடாமங்கலம் வழியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களுக்கு பஸ் மற்றும் வாகனங்கள் தினந்தோறும் செல்கிறது. அதேபோன்று நீடாமங்கலத்தில் ரயில்வே கேட்டு மூடும்பொழுது கும்பகோணத்தில் இருந்து வையளத்தூர் மேம்பாலம் வழியாக பழைய நீடாமங்கலம் வந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஸ் மற்றும் வாகனங்கள் சென்று வருகிறது.

இந்த வையகளத்தூர் மேம்பாலம் வழியாக அரவூர், மாணிக்கமங்கலம், வழியாக குடவாசல் செல்பவர்கள் செல்லலாம். அதே போன்று வையககளத்தூர் ஒளிமதி, ஓடுதுறை, கிளேரியம், கொரடாச்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இருசக்கர வாகனங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் செலன்று வருகின்றனர். இரவு நேரங்களில் இந்த பகுதிளில் மின் விளக்குகள் பல மாதங்களாக எரியாததால் மக்கள் மிகவும் பெரும் அவதியுற்று செல்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நீடாமங்கலம் அருகே உள்ள வையகலத்தூர் மேம்பாலத்தில் மின்விளக்குகளை எரிய விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வையாளத்தூர் மேம்பாலத்தில் மின்விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: