புதுக்கோட்டையில் புதிய மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம்

புதுக்கோட்டை, மார்ச் 20: புதுக்கோட்டை மாநகராட்சி, சந்தைப்பேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா, நேற்று வழங்கினார்.பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மாணாக்கர்களின் கல்வியினை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், இல்லம் தேடி கல்வி திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், சந்தைப்பேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிய மாணாக்கர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது.

அதன்படி, 2025 – 2026 ஆம் கல்வியாண்டிற்கு, புதுக்கோட்டை மாவட்டம், போஸ்நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 5 மாணாக்கர்களும், ராஜகோபாலபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 5 மாணாக்கர்களும், சந்தைப்பேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 40 மாணாக்கர்களும் என ஆக மொத்தம் 50 புதிய மாணாக்கர்கள் சேர்க்கை இன்றையதினம் நடைபெற்றது. எனவே, மாணாக்கர்கள் அனைவரும் சிறந்த முறையில் கல்வி கற்பதை உறுதி செய்திட ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வில், முதன்மை கல்வி அலுவலர்.சண்முகம், மாவட்ட கல்வி அலுவலர்செந்தில் (தொடக்கக் கல்வி), வட்டார கல்வி அலுவலர்கள்.பிரியா,.கிருஷ்ணவேனி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post புதுக்கோட்டையில் புதிய மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் appeared first on Dinakaran.

Related Stories: