ஏலச்சீட்டு மோசடி 2 பேர் கைது

திருச்சி, மார்ச் 20: திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி, கேகேநகர் ரோடு, 2வது மெயின் ரோடு, ரங்கா நகரைச் சேர்ந்தவர் மார்ட்டின் ராஜ் மகள் டெய்லி லில்லி. இவர் அதே பகுதியில் வசித்து வந்த மீனாபார்வதி மற்றும் அவர் மகள் விசாலாட்சி ஆகிய இருவர், பண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் மற்றும் ரூ.5 லட்ச ஏலச்சீட்டுகள் நடத்தி வருவதாகவும், மாதம் ரூ.10 ஆயிரம் செலுத்தினால் 1 வருடத்தில் ரூ.1.20 லட்சத்துடன் சேர்த்து முதிர்வு தொகை ரூ.1.50 தருவதாகவும், பிக்ஸட் டெபாசிட்டில் பணம் செலுத்தினால் ரூ.1 லட்சத்தை 1 வருடத்தில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரமாக தருவதாக லில்லியிடம் தெரிவித்துள்ளனர். இந்த ஆசை வார்த்தையை நம்பி லில்லி பிக்ஸட் டெபாசிட்டில் ரூ.9 லட்சத்து 40 ஆயிரம் செலுத்தியுள்ளார்.

காலம் முதிர்வடைந்து வெகு நாட்களாகியும் இவர்கள் பணத்தை திரும்ப தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் லில்லி தன் பணத்தை பெற்றுத்தர வேண்டி திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து போலீசார் மீனாபார்வதி மற்றும் விசாலாட்சி ஆகியோர் மீது வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து மதுரை சிறப்பு நீதிமன்ற மன்ற காவலில் உட்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் இதுவரை 17 முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. மேலும் இந்த சீட்டில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்டிருந்தால் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்ெபக்டர் சுகந்தியிடம் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஏலச்சீட்டு மோசடி 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: