வேளாங்கண்ணி ஆரிய நாட்டு தெருவில் குடிநீர் தொட்டி கட்டும் பணி தொடக்கம்

நாகப்பட்டினம், மார்ச் 20: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் அம்ரூத் 2.0 திட்டத்தில் வேளாங்கண்ணி ஆரிய நாட்டு தெருவில் 2 லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்க பூமிபூஜை நேற்று நடந்தது. கீழையூர் வட்டார ஆத்மா தலைவரும், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத்தலைவருமான தாமஸ்ஆல்வா எடிசன் தொடங்கி வைத்தார்.

வேளாங்கண்ணீ பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா, வேளாங்கண்ணி பேரூராட்சி திமுக செயலாளர் மரிய சார்லஸ், வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, பேரூராட்சி இளநிலை பொறியாளர் ரமேஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் நிக்சன், வெற்றிவேல், சுமதி, சத்யா, சசிரேகா மற்றும் ஆரிய நாட்டு தெரு பஞ்சாயத்தார்கள், திமுக நிர்வாகிகள் சார்லஸ், கந்தையன், லியோ ஜெரோலின், ஸ்டாலின் பிரசாந்த், பாண்டியன், அருளாணந்தம், சசிகுமார், ஜாக்கி, விலேக்,கயல் மற்றும் பேரூராட்சி அலுவலகர்கள் சந்துரு, மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post வேளாங்கண்ணி ஆரிய நாட்டு தெருவில் குடிநீர் தொட்டி கட்டும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: