மதுரை, மார்ச் 20: மதுரை, உத்தங்குடியில் வசிக்கும் பெரியகருப்பன் என்பவரது மகள் தேவி(26). இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சாந்தி என்பவருக்கும் இடையே இடப்பிரச்னை இருந்து வருகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த தேவியின் வீட்டு மேற்கூரையில் வேயப்பட்ட ஓடுகளை சாந்தி அடித்து சேதப்படுத்தினாராம்.
மேலும் அவரது வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து அங்கிருந்த டிவி உள்ளிட்ட உடமைகளையும் அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது.இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசில் தேவி புகார் செய்தார். இதுதொடர்பாக சாந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post வீட்டை உடைத்து சேதப்படுத்திய பெண் மீது வழக்கு appeared first on Dinakaran.