திருவாரூர், மார்ச் 20: பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் நடந்தது. திருவாரூரில் மாவட்ட தலைவர் பவாணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கோமதி முன்னிலை வகித்தார். இதில் மாநில பொருளாளர் பிரமிளா மற்றும் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் மாலதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும், பெண்களுக்கு கண்ணியமான வேலையை உறுதி செய்ய வேண்டும், பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும். நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரைகளை முறையாக செயல்படுத்திடவேண்டும். சம வேலை, சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் appeared first on Dinakaran.