பெரம்பலூர்,மார்ச்.20: பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட காவல்துறை சார்பாக சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருந்து கொள்வது பற்றி மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏடிஎஸ்பி (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) பாலமுருகன் தலைமையில் நேற்று பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பெரம்பலூர் டிஎஸ்பிக்கள் (உட்கோட்டம்) ஆரோக்கியராஜ், (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்) பிரபு, பெரம்பலூர் டவுன் டிராபிக் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன், சப்.இன்ஸ் பெக்டர்கள் (சைபர் கிரைம்) மனோஜ், (தொழில்நுட்பம்) சிவனேசன், புள்ளியியல் ஆய்வாளர்கள் சாகித், வசந்தா ஆகியோர் இணைந்து, சமூக நீதி மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு, பெண்கள் மற்றும்குழந்தைகள் மீதான பாலியல் தொடர்பான விழிப்புணர்வு, சைபர் குற்றம் குறித்து விழிப் புணர்வு, கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்களை உபயோகிப் பதால் ஏற்படும் தீங்கு பற்றிய விழிப்புணர்வு, சாலை மற்றும் போக்கு வரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பின்னர், இக்காலச் சூழ்நிலையில் அதிகமாக நடைபெறும் சைபர் குற்றங்களான, இணையம் வழியாக நடக்கும் குற்றங்களுக்கு வழி வகுத்திடும் விதமாக ஏடிஎம் கார்டை எவ்வாறு பாது காப்பாக பயன்படுத்துவது என்பது பற்றியும், ஏடிஎம் கார்டு மற்றும் அதன் ஓடிபி எண்களை யாரிடமும் பகிரகூடாது என்பது பற்றியும், வங்கி விவரங்களை யாருக்கும் கூறக்கூடாது என்றும், பணஇழப்புஏதேனும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930க்கு உடனடியாக தகவல் அளிப்பது குறித்தும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்தும் விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
The post சைபர் குற்றங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.