திருத்துறைப்பூண்டி, மார்ச் 14: திருத்துறைப்பூண்டி-நாகை சாலையில் உள்ள தேளிக்குளத்தைச் சுற்றி நடைபெற்ற தூய்மைப் பணியை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பார்வையிட்டார் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் கோயில் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வருகிற 18ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் நாகை சாலையில் உள்ள தேளிக்குளத்தினை சுற்றி தூய்மை பணியாளர்கள் கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. தூய்மை பணிகள் நடைபெற்ற தேளிகுளத்தினை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பார்வையிட்டார். அப்போது நகர மன்ற உறுப்பினர் எழிலரசன் மற்றும் சுகாதர ஆய்வாளர் மாரிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.
The post தி.பூண்டியில் தெப்போற்சவம் நடைபெறும் தேளிக்குளத்தைச் சுற்றி தூய்மை பணி appeared first on Dinakaran.