மழையால் சேதமான சாலை சீரமைக்க வேண்டும்: கலெக்டரிடம் மனு

 

முத்துப்பேட்டை, மார்ச் 18 முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரத்தில் மழையால் சேதமான சாலையை சீரமைத்து தர வேண்டுமென கலெக்டருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் தில்லைவிளாகம் ரயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவர் ஜெ.தாஹிர் திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி, கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து மேலப்பெருமழை கிராமத்தை இணைக்கும் சாலை ஐந்தரை கோடி மதிப்பீட்டில் பிரதமர் சாலை திட்டத்தில் போடப்பட்டது. இந்த சாலையின் தொடக்கத்தின் அருகில் கழனியாறு என்ற கிளை ஆறு செல்வதால் வளைவில் தடுப்புச்சுவர் கட்டவேண்டும், இல்லாவிட்டால் சாலை ஆற்றுக்குள் சென்று விடும் என்று பணிகள் நடைபெற்ற தொடக்கத்தில் எடுத்துக்கூறியும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு பெய்த மழைக்கு சாலை சேதமாகியுள்ளன. எனவே தடுப்புசுவர் கட்டி அந்த சாலையை சரியாக செப்பனிட வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post மழையால் சேதமான சாலை சீரமைக்க வேண்டும்: கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: