திருச்சி, மார்ச் 18: இரவல் பெற்ற காரை திரும்ப செலுத்தாதவர் மீது போலீசார் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா பனையூரை சேர்ந்த சரவணக்குமார் (46) என்வரிடம் கடந்த மார்ச்.2ம் தேதியும், திருச்சி திருவெறும்பூர் பிரகாஷ் நகரை சேர்ந்த கணேசன் (40) என்பவரிடம் கடந்த ஜன.27ம் தேதியும் மற்றும் உறையூர் பனிக்கன் தெருவை சேர்ந்த விஜய் (33) என்பவரிடம் ஜன.23ம் தேதியும், உறையூர் கீழ புதுப்பாய்காரை சேர்ந்த வசந்த குமார் என்பவர் கார்களை இரவலாக பெற்றுள்ளார். வாங்கிய கார்களை திரும்ப செலுத்தாததால், கார் உரிமையாளர்கள் இதுகுறித்து உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த தொடர் புகார் குறித்து வழக்கு பதிந்து விசாரித்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட வசந்தகுமார் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.
The post மூன்று நபர்களிடம் கார்களை இரவலாக பெற்று திருப்பி தராதவருக்கு சிறை appeared first on Dinakaran.