வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முக்கியமான சாலைகளில் பசுமை பந்தல்

 

தஞ்சாவூர், மார்ச்18: தஞ்சை பழைய பேருந்து நிலையம் தெற்கலங்கம் மற்றும் தாஸ்தமால் சந்து உள்ளிட்ட பகுதிகளின் குண்டும் குழியுமான சாலையை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆய்வு செய்தார். அண்மையில் தொடர்ந்து பெய்த மழையால் தஞ்சை பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் நிலையம் உள்ளிட்ட 51 வார்டுகளிலும் பழுதடைந்த சாலைகளை அடுத்த மழை துவங்குவதற்கு முன் சீரமைத்திட முடிவு செய்து மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், ஆணையர் கண்ணன் மற்றும் பொறியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது, தொடர்ந்து பெய்த மழையால் அண்மையில் போடப்பட்ட புதிய சாலைகள் சில இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. அந்த சாலைகளை ஆய்வு செய்து நாளை முதல் சீரமைப்பு பணிகளை துவங்க உள்ளோம். பொதுமக்கள் அதிகம் வசிக்கக் கூடிய சிறிய அளவிலான சந்துகளின் சாலைகளையும் விரைவாக சரிசெய்யும் பணிகள் நாளை முதல் துவங்க உள்ளது.

தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் அடுத்த மழைக்காலம் துவங்குவதற்கு முன் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்படும். விரைவில் போக்குவரத்து நிறைந்த தஞ்சை அண்ணா சிலை பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலில் செல்வோரின் வசதியாக பசுமை பந்தல் போடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முக்கியமான சாலைகளில் பசுமை பந்தல் appeared first on Dinakaran.

Related Stories: