கந்தர்வகோட்டையில் மாணவர்கள் அவதி: பள்ளி சாலையை சீர்படுத்த கோரிக்கை

 

கந்தர்வகோட்டை, மார்ச் 18: கந்தர்வகோட்டையில், பெரிய கடை வீதி சாலை ஆக்கிரமைப்பால் சரியான நேரத்திற்கு மாணவர்கள் பள்ளி செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகரில் பெரிய கடை வீதி வழியாக, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் அரண்மனை தெரு, கொத்தகம் போன்ற பகுதிக்கு செல்லும் முக்கிய சாலை ஆகும்.

இந்த சாலையில் தினசரி மக்கள் கூட்டம் அதிக அளவில் உள்ள நிலையில் சாலை பகுதியில், அதிக ஆக்கிரமைப்பால் பேருந்துகள் சென்று,வரும்போது எதிர்வரும் வாகனங்களுக்கு வழி விடாத நிலை உள்ளதால், அதிக கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனையடுத்து, கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் வட்டாட்சியர் சாலையை நேரில் பார்வையிட்டு ஆக்கிரமைப்பை அகற்றி சாலை சீர் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைதடதுள்ளார்கள். சாலை உள்ள ஆக்கிரமிப்பு அகற்றினாலே பொதுமக்கள் பயனடைவார்கள் என மாணவர்கள்,ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

The post கந்தர்வகோட்டையில் மாணவர்கள் அவதி: பள்ளி சாலையை சீர்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: