தா.பழூரில் டாஸ்மாக் கடையை முற்றுகை: பாஜ.வினர் 19 பேர் கைது

 

தா.பழூர், மார்ச் 18: சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்திற்கு சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அரியலூர் மாவட்டம் தா.பழூரில் டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தா.பழூர் ஒன்றிய தலைவர் சக்திவேல் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் அய்யப்பன் உள்ளிட்ட பாஜ.வினர் திட்டமிட்டு இருந்தனர்.

அப்போது, சுத்தமல்லி பிரிவை சாலையில் இருந்து ஊர்வலமாக வந்த பாஜகவினர், டாஸ்மாக் கடை நெருங்கியதும் திடிரென ஓட்டம் பிடித்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு இழுத்து மூட முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால், அங்கு போலிசாருக்கும், பாஜகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விடுதலை செய்ய வேண்டும் என்றும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மாவட்டத் தலைவர் அய்யப்பன், மாவட்ட செயலாளர் இளையராஜா உள்ளிட்ட 19 பேரை போலிசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்.

The post தா.பழூரில் டாஸ்மாக் கடையை முற்றுகை: பாஜ.வினர் 19 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: