வரும் புதன் கிழமை மருங்குளம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம்

 

தஞ்சாவூர், மார்ச்18: வரும் புதன்கிழமை(19ம் தேதி) தஞ்சாவூர் வட்டம் நாஞ்சிக்கோட்டை சரகம், மருங்குளம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு 1969ம் ஆண்டு முதல் தமிழகத்தில் மக்கள் நேர்காணல் முகாம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 2வது புதன்கிழமை நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து, 12.03.2025 அன்று தஞ்சாவூர் வட்டம், நாஞ்சிக்கோட்டை சரகம், மருங்குளம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்திட தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

ஆனால் 12.03.2025 அன்று மாசி மகம் தீர்த்தவாரியை முன்னிட்டு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்ட காரணத்தினால் வரும் 19.03.2025 (புதன்கிழமை) அன்று தஞ்சாவூர் வட்டம். நாஞ்சிக்கோட்டை சரகம், மருங்குளம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்திட மாவட்டகலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post வரும் புதன் கிழமை மருங்குளம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: