உப்பிலியபுரத்தில் பாஜகவினர் 7 பேர் கைது

 

துறையூர், மார்ச் 18: உப்பிலியபுரம் பகுதியில் பாஜகவினர் 7 பேரை போலீசார் கைது செய்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கைது செய்ததை கண்டித்தும், மதுபான ஊழலைக் கண்டித்தும் உப்பிலியபுரம் கிழக்கு மண்டல தலைவர் மோகன்தாஸ் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த 7 பேர் உப்பிலியபுரத்திலிருந்து சோபனபுரம் செல்லும் சாலையிலுள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட சென்றனர். அப்போது அவர்கள் அனைவரையும் உப்பிலியபுரம் போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

The post உப்பிலியபுரத்தில் பாஜகவினர் 7 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: