கும்பகோணம், மார்ச் 14: கும்பகோணம் தலைமை அஞ்சல் நிலையத்தில் தாய்மார்களின் நலன் கருதி பாலூட்டும்அறை திறக்கப்பட்டுள்ளது. மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் திருச்சிராப்பள்ளி அறிவுறுத்தலின்படி, கும்பகோணம் தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு வரும் தாய்மார்களின் நலன்கருதி சர்வதேச மகளிர் தின விழாவின் ஒரு பகுதியாக பெண்களுக்கான பாலூட்டும் அறை திறப்பு விழா நடைபெற்றது.
இதில் கும்பகோணம் சப் கலெக்டர் ஹிருத்யா பங்கேற்று பெண்களுக்கான பாலூட்டும் அறையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அஞ்சல் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கும்பகோணம் அஞ் சல் கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் செய்திருந்தார்.
The post கும்பகோணம் தபால் நிலையத்தில் தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை appeared first on Dinakaran.