தஞ்சாவூர், செப். 27: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் மாவட்ட கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கங்களுடன் சங்க ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் விவரம், சங்கத்தின் வரவு செலவு விவரம், சங்கத்தின் பதிவை புதுப்பித்தல் செய்வது தொடர்பான விவரங்கள், நன்கொடை வசூலிப்பது குறித்த கால அட்டவணை விவாதித்தல், உறுப்பினர்கள் சேர்த்தல் போன்றவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் கலந்துரையாடினார். முடிவில் உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post கிறிஸ்தவ, முஸ்லிம் மகளிர் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.