சத்தியமங்கலம், ஜூன் 13: சத்தியமங்கலம் அருகே தங்க நகரம் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே மாரனூர், செண்பகபுதூர் மற்றும் நடுப்பாளையம் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் நீர்வளத்துறையின் மூலம் பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் இருபுறமும் உள்ள தார் சாலையை விட தாழ்வாக பாலம் கட்டப்பட்டதால் நேற்று முன்தினம் அப்பகுதியில் பெய்த மழை நீர் பாலத்தில் குளம் போல் தேங்கி நின்றது.
இதனால் பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே பாலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பாலத்தில் தேங்கிய மழை நீர் appeared first on Dinakaran.