பாலஸ்தீன மக்கள் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு,ஜூன்13: அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு, வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சாவித்திரி தலைமை வகித்தார்.

மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் ராஜு உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.இதில், அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீதான போரை இஸ்ரேல் ராணுவம் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆயுதங்களால் தாக்கி, நல்ல மனிதர்களை மாற்றுத்திறனாளிகளாக மாற்றக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post பாலஸ்தீன மக்கள் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: