மதுரை, ஜூன் 13: மதுரையில் மதுபான பாருக்குள் புகுந்து, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மதுரை, தத்தனேரி வைகை வடகரையில் செயல்பட்டு வரும் மதுபான பார் ஒன்றில் சார்லஸ் விஜி என்பவர் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று திடீரென பாருக்குள் புகுந்த வாலிபர் ஒருவர், கேஷியரிடம் பணம் தரும்படி கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
அவர் கொடுக்க மறுத்ததால், அங்கிருந்த வறுத்த சிக்கன், அவித்த முட்டை உள்ளிட்ட உணவு பொருட்களை தூக்கி வீசியுள்ளார். மேலும் சார்லஸ் விஜியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ.500ஐ பறித்துச்சென்றார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, தத்தனேரி காமாட்சி நகரைச் சேர்ந்த ராமையா மகன் குண்டுமலை (எ) ராமச்சந்திரன்(30) என்பரை கைது செய்தனர்.
The post மதுரை மதுக்கடை பாரில் பணம் பறித்த வாலிபர் கைது appeared first on Dinakaran.