தென்னம்பாளையம் மார்க்கெட்டில் சுரக்காய் கட்டுகள் ரூ.250க்கு விற்பனை

 

திருப்பூர், ஜூன் 13: திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள தினசரி காய்கறி சந்தைக்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. காய்கறிகளை பல்வேறு பகுதிகளில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கிச் செல்கின்றனர்.

பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து காய்கறிகள் விற்பனை கடந்த மாதத்தைவிட தற்போது அதிகரித்துள்ள நிலையில் விலையும் சற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று தென்னம்பாளையம் மார்க்கெட் இருக்கு சுரக்காய் அதிகளவு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. 15 கிலோ எடையுள்ள தரமான சுரக்காய் கட்டு 200 முதல் 250 முதல் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரங்களில் 150 முதல் 200 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

The post தென்னம்பாளையம் மார்க்கெட்டில் சுரக்காய் கட்டுகள் ரூ.250க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: