வருசநாடு, ஜூன் 13: மயிலாடும்பாறை அருகே பாறைக்குளம் ஓடை முதல் சிறப்பாறை கிராமம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூர சாலை உள்ளது. இந்த சாலை அமைத்து பல ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படவில்லை. இதனால் தற்போது இந்த சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.
இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என சிறப்பாறை கிராம பொதுமக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து டி.என்.ஆர்.ஆர்.ஐ.எஸ் திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகம் ரூ.68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்பின் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சாலை பணி நடந்து முடிந்தது. மீதமுள்ள பகுதிகளில் சாலை பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் சாலை பணி எப்போது நடைபெறும் என கிராமமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளன.
The post சிறப்பாறை சாலைப்பணியை விரைந்து முடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.