கோவை, ஜூன் 13: தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் மற்றும் கோவை டென்னிக்லோ சார்பாக தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விளாங்குறிச்சியில் வரும் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தேர்வுப் போட்டிகள் நாளை (14ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (15ம் தேதி) ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெறும். இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி, கோவா, மகாராஷ்டிரா, ஒடிசா, ஜார்கண்ட், டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலகளில் இருந்து போட்டியாளர்கள் 120 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்தப் தேர்வு போட்டியில் சிறப்பாக விளையாடி அதிக புள்ளிகள் எடுக்கும் 8 பேர் மட்டுமே வரும் வரும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இதற்கு முன்பாக நடைபெற்ற தேசிய அளவிலான் டென்னிஸ் போட்டியில் அதிக புள்ளிகள் பெற்றிருக்கும் மொத்தம் 32 வீரர்கள் ஏற்கனவே இப்போட்டிற்கான தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு மொத்தம் ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசும், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
The post கோவையில் வரும் 16ம் தேதி தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி துவக்கம் appeared first on Dinakaran.