தேனி, ஜூன் 13: தேனியில் உள்ள கோட்ட தபால் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 24ம் தேதி தபால் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. தேனியில் உள்ள தேனி கோட்ட தபால் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 24ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.
தபால் துறை சார்பில் தேனி தபால் கோட்டத்திற்குட்பட்ட பகுதி வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு தபால் பணிகள் குறித்து குறைகள், தபால் சேவையை மேம்படுத்தும் ஆலோசனைகள் ஏதும் இருப்பின் உரிய விபரங்களுடன் தெரிவிக்கலாம். நேரில் வரஇயலாதவர்கள் dotheni.indiapost.gov.in ல் தங்களது குறைகள் மற்றும் ஆலோசனைகளை வருகிற 17ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பலாம் என தேனி கோட்ட தபால் கண்காணிப்பாளர் என்.எம்.குமரன் தெரிவித்துள்ளார்.
The post தபால் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.