மதரசா மாணவர்கள் குரானுடன் பகவத் கீதையும் படிக்க வேண்டும்: ம.பி ஐபிஎஸ் அதிகாரி அறிவுரையால் சர்ச்சை

போபால்: மத்தியப்பிரதேசத்தில் மதரசா மாணவர்கள் குரானுடன் பகவத் கீதையையும் படிக்கும்படி மூத்த ஐபிஎஸ் அதிகாரி வலியுறுத்தி இருக்கிறார். மத்தியப்பிரதேசத்தில் செஹோர் மாவட்டத்தின் தோராஹா கிராமத்தில் உள்ள மதரசாவில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ராஜா பாபு சிங் வீடியோ கான்பரன்சிங் மூலமாக மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய ராஜா பாபு சிங் கூறுகையில்,‘‘மாணவர்கள் பெறும் கல்விக்காக அவர்களை நான் பாராட்டுகின்றேன். ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அறிவியல் மனப்பான்மை மற்றும் சகிப்புத் தன்மை ஆகியவற்றில் அக்கறை வளர்த்துக்கொள்ளுமாறு மாணவர்களையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்கிறேன். மாணவர்கள் குரானுடன் பகவத் கீதையையும் படிக்க வேண்டும். இது அவர்களின் பாதையை ஒளிரச் செய்வதற்கு உதவும்” என்றார். இது சர்ச்சையை ஏற்படுது்தி உள்ளது.

Related Stories: