அயோத்தி: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜிஎஸ்டி துணை ஆணையர் பிரசாந்த் குமார் சிங் ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து பிரசாந்த் குமார் சிங் கூறுகையில்,\”கடந்த சில நாட்களாக பிரயாக்ராஜின் புனித பூமியில் இருந்து சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் அரசியலமைப்பு ரீதியாக பதவியில் இருக்கும் நமது மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கு எதிராக ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை தெரிவித்துள்ளார். சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்தும் இழிவான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் நான் ஆழ்ந்த வேதனை அடைந்தேன். இதனால், ராஜினாமா செய்துள்ளேன்\” என்றார்.
அயோத்தியில் ஜிஎஸ்டி துணை ஆணையர் ராஜினாமா
- ஜிஎஸ்டி
- ஆணையாளர்
- அயோத்தி
- துணை ஆணையாளர்
- பிரசாந்த் குமார் சிங்
- சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த்
- உத்திரப்பிரதேசம்
- முதல் அமைச்சர்
- யோகி ஆதித்யநாத்
- பிரயாக்ராஜ்…
