பிரதமர் மோடி தலைமையின் கீழ் 9 முறை மத்திய பட்ஜெட் நிர்மலா சீதாராமன் சாதனை: ப.சிதம்பரத்தை சமன் செய்கிறார்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பிப்.1 அன்று மத்தியபட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதில் புதிய சாதனையை அவர் படைக்க உள்ளார். ஒரே பிரதமரின் கீழ் தொடர்ச்சியாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமை நிர்மலா சீதாராமனையே சாரும். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் வெவ்வேறு காலகட்டங்களில் தாக்கல் செய்த 10 பட்ஜெட்டுகளின் சாதனையை நிர்மலா சீதாராமன் அடுத்த ஆண்டு சமன் செய்வாார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொரர்ஜி தேசாய் 1959-1964 வரை நிதியமைச்சராக இருந்த காலத்தில் மொத்தம் 6 பட்ஜெட்டுகளையும், 1967-1969க்கு இடையில் 4 பட்ஜெட்டுகளையும் தாக்கல் செய்தார். முன்னாள் நிதியமைச்சர்கள் ப.சிதம்பரம் 9 முறையும், பிரணாப் முகர்ஜி 8 முறையும் பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தனர். இவர்கள் வெவ்வேறு பிரதமர் தலைமையின் கீழ் பட்ெஜட் தாக்கல் செய்தனர். ஆனால் நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் 9 தொடர்ச்சியான பட்ஜெட்டுகளை தாக்கல் செய்ய உள்ளார். இதுவரை 2024 பிப்ரவரி 2024ல் இடைக்கால பட்ஜெட் உட்பட மொத்தம் 8 தொடர்ச்சியான பட்ஜெட்டுகளை அவர் தாக்கல் செய்துள்ளார்.

முதல் பட்ஜெட்: சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய பட்ஜெட் 1947 நவம்பர் 26 அன்று நாட்டின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியால் தாக்கல் செய்யப்பட்டது.
அதிக பட்ஜெட்டுகள்: முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் அதிக எண்ணிக்கையிலான பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த சாதனையைப் படைத்துள்ளார். பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கீழும், பின்னர் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் கீழும் நிதியமைச்சராக இருந்த காலத்தில் மொத்தம் 10 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். அவர் 1959 பிப்.28ல் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் மொத்தம் 10 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார். முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் 9 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பிரதமர் எச்.டி. தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் போது 1996 ​​மார்ச் 19 அன்று அவர் முதன்முதலில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்த காலத்தில் 8 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார். 1982, 1983 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் அவர் 3 பட்ஜெட்டுகளையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2009 பிப்ரவரி முதல் 2012 மார்ச் வரை தொடர்ச்சியாக 5 பட்ஜெட்டுகளையும் தாக்கல் செய்தார்.
மன்மோகன் சிங்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 1991 மற்றும் 1995 க்கு இடையில் பி.வி. நரசிம்ம ராவ் அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்தபோது ஐந்து தொடர்ச்சியான பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார்.
மிக நீண்ட பட்ஜெட் உரை: நிர்மலா சீதாராமன் 2020 பிப்ரவரி 1 அன்று பட்ஜெட் உரையை வாசித்த போது இரண்டு மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்தது. இது மிக நீண்ட பட்ஜெட் உரை.
மிகக் குறுகிய பட்ஜெட் உரை: 1977ல் ஹிருபாய் முல்ஜிபாய் படேலின் இடைக்கால பட்ஜெட் உரை மிகக் குறுகியது, வெறும் 800 வார்த்தைகள் மட்டுமே இருந்தது.
நேரம் மாற்றம்: பட்ஜெட் பாரம்பரியமாக பிப்ரவரி கடைசி நாளில் மாலை 5 மணிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. காலனித்துவ கால நடைமுறையைப் பின்பற்றிய இந்த நேரம், லண்டன் மற்றும் இந்தியாவில் ஒரே நேரத்தில் அறிவிப்புகளை வெளியிட முடியும். இங்கிலாந்து நேரத்தை விட இந்தியாவில் நேரம் 4 மணி நேரம் 30 நிமிடங்கள் முன்னதாக உள்ளது. எனவே இந்தியாவில் மாலை 5 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்வது வழக்கமாக இருந்தது.
1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசாங்கத்தில் அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ​​காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது நேரம் மாற்றப்பட்டது.அப்போதிருந்து, பட்ஜெட்டுகள் காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகின்றன.
தேதி மாற்றம்: பட்ஜெட் தாக்கல் தேதி 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதனால் மார்ச் இறுதிக்குள் நாடாளுமன்ற ஒப்புதல் செயல்முறையை அரசாங்கம் முடிக்கவும், ஏப்ரல் 1 ஆம் தேதி நிதியாண்டின் தொடக்கத்திலிருந்து பட்ஜெட்டை செயல்படுத்தவும் அரசால் அனுமதிக்க முடிந்தது. அதற்கு முன்பு பிப்ரவரி கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

Related Stories: