புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் ராம்குமார் கௌதம் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,\\”மாநில வழக்கறிஞர்கள் சங்கங்களில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் பெறும் வகையில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,\\” பார் கவுன்சில்களில் பெண்களும் இடம்பெறும் வகையில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் முக்கிய தீர்ப்பை வழங்கியிருந்தது. ஆனால் எஸ்சி, எஸ்டி விவகாரங்களில் அமைதியாக இருக்கிறது. எனவே இந்த விவகார, தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்து இருய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரிப்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி,’ பெண்கள் தங்களுக்கான பிரதிநிதித்துவம் கேட்டு பல ஆண்டுகளாக போராடி கடைசியாக இந்த நீதிமன்றத்தின் மூலம் வெற்றி கண்டுள்ளனர். குறிப்பாக இந்த விவகாரத்தில் மனுதாரர் சம்பந்தப்பட்ட அமைப்புகளை தான் நாடி இருக்க வேண்டும். அதைத்தவிர்த்து நேரடியாக உச்ச நீதிமன்றத்தை நாடியதை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
