ஆண் பாவம் உள்பட பல படங்களில் நடித்த நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி மரணம்

சென்னை: நாட்டுப்புற பாடகியும், திரைப்பட நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 99. சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியைச் சேர்ந்தவர் கருப்பாயி (99). நாட்டுப்புற பாடகியான இவர், ‘ஆண் பாவம்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ‘ஆயுசு நூறு’, ‘ஏட்டிக்கு போட்டி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த அவருக்கு, 1993-ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

கொல்லங்குடி கருப்பாயி கடைசியாக இயக்குநர் சசிக்குமார் இயக்கிய ‘காரி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். தன்னுடைய கணவர், மகள் இறந்த நிலையில், கொல்லங்குடியில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக நேற்று காலை மரணமடைந்தார். அவருடைய இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் என அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கொல்லங்குடி கருப்பாயின் மறைவுக்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: