நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் ஆபாச மெசேஜ்: 11 பேரின் பெயர்களையும் வெளியிட்ட ரம்யா

சென்னை: தனக்கு ஆபாச தகவல் அனுப்பிய நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் 11 பேரின் பெயர்களை நடிகை ரம்யா வெளியிட்டுள்ளார். குத்து படத்தில் நடித்த ரம்யா, வாரணம் ஆயிரம், பொல்லாதவன் படங்களிலும் நடித்திருக்கிறார். பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது ரசிகரான ரேணுகாசாமியை கடத்தி கொலை செய்த வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்யா, ரேணுகாசாமியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக கருத்து பதிவிட்டிருந்தார். இது தர்ஷனின் ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சில ரசிகர்கள் நடிகை ரம்யாவுக்கு ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பி வசைபாடியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், கோபமடைந்த ரம்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு தர்ஷனின் ரசிகர்கள் ஆபாச தகவல் அனுப்பி மோசமான வார்த்தையில் கருத்தை பதிவிடுவதாகவும், இதுபோன்றவர்கள் தான் பெண்களை வன்கொடுமை செய்வதாகவும் காட்டமாக சாடியுள்ளார். மேலும் தனக்கு ஆபாச தகவல் அனுப்பிய 11 பேரின் பெயர்களையும் ரம்யா பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தனக்கு ஆபாச தகவல் அனுப்பிய 11 பேரின் பக்கங்களையும் அவரின் மெசேஜ்களையும் ரம்யா பகிர்ந்துள்ளார். இது குறித்து மாநில மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரம்யா வழக்கை விசாரித்து, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அவதூறான செய்திகளை உடனடியாக நிறுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையை கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரம்யா வழக்கை விசாரித்து, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அவதூறான செய்திகளை உடனடியாக நிறுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையை கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: