சட்டமும் நீதியும் நன்றி அறிவித்த வெப்சீரிஸ் குழு

சென்னை: 18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் நடித்த வெப்சீரிஸ், சட்டமும் நீதியும். நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான சீரிஸாக ஜீ5 ஓடிடியில் வெளியான இந்த சீரிஸ், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் பேசியதாவது: என் கணவர் பிரபாகரன் தான் இதன் தயாரிப்பாளர், ஆனால் என் பெயர் போட்டு என்னை தயாரிப்பாளர் ஆக்கிவிட்டார்.

இந்த சீரிஸ் நடந்த போது பல கஷ்டங்கள் வந்தது. ஆனால் அதையெல்லாம் சமாளித்து, இரவு பகல் தூங்காமல் அவர் கஷ்டப்பட்டதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். சினிமா மீது உள்ள ஆசையில் அதில் சாதிக்க வேண்டும் என்ற வெறியில் இருந்தார். பல அவமானங்களைச் சந்தித்துள்ளார். ஆனால் அவர் கடின உழைப்பு இப்போது வெற்றி பெற்றிருக்கிறது என்றார். இயக்குநர் பாலாஜி செல்வராஜ் பேசும்போது, ‘‘பத்திரிக்கை சினிமா ஊடகங்களுக்கு நன்றி. சூரி அண்ணா தான் இந்தக் கதையை எடுத்துத் தந்து, இந்த வாய்ப்பை வாங்கித் தந்தார். இந்த படைப்பை வெற்றியாக்கித் தந்த அனைவருக்கும் நன்றி’’ என்றார்.

Related Stories: