சத்தியத்தை மீறினாரா விஜய்சேதுபதி?

விஜய்சேதுபதி கடந்த 2003ம் ஆண்டு ஜெஸ்ஸி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சூர்யா என்ற மகனும் ஸ்ரீஜா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், மனைவி 6 மாதம் கர்ப்பமாக இருந்தபோது அவர் வயிற்றில் கை வைத்து செய்து கொடுத்த சத்தியத்தை விஜய் சேதுபதி மீறிவிட்டார். அது என்ன சத்தியம், ஏன் காப்பாற்றவில்லை என்பது குறித்து அவரே பேசியிருக்கிறார். விஜய்சேதுபதி பேசும்போது, ”ஜெஸ்ஸியை நான் திருமணம் செய்தபோது நடிகராக வேண்டும் என்கிற ஆசை எனக்கு இல்லை. கல்யாணத்தை முடித்துவிட்டு துபாய்க்கே சென்றுவிடலாம் என்பது தான் எனது திட்டம். நான் ஒரு இடம், மனைவி ஒரு இடம் என்று இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அதனால் துபாய் செல்லாமல் இங்கேயே இருந்துவிட்டேன்.

அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நடிகராகும் ஆசை வந்தது. மனைவிக்கு தெரியாமல் சினிமாவில் நடிக்க முயற்சி செய்தேன். ஜெஸ்ஸி இரண்டாவது முறையாக கர்ப்பமானபோது எனது ரகசிய கனவை கண்டுபிடித்துவிட்டார். ஆறு மாத கர்ப்பமாக இருந்தபோது ஒரு நாள் பைக்கில் இருந்து குதித்துவிட்டார். நடிக்க வாய்ப்பு தேடுவதற்கு எடுத்துவைத்த புகைப்படங்களை மனைவி பார்த்துவிட்டார். கோபத்தில் அவர் அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார். பிறகு நான் சென்று, இனி நடிகராக முயற்சி செய்ய மாட்டேன் என கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் அடித்து சத்தியம் செய்தேன். அந்த புகைப்படங்களையும் கிழித்து வீசிவிட்டேன். ஆனால் அந்த சத்தியத்தை மீறி நான் நடிகராகி விட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Related Stories: