சென்னை: சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், சரத்குமார், யோகி பாபு, சுரபி, மந்த்ரா பேடி நடித்துள்ள படம், ‘அடங்காதே’. தவிர்க்க முடியாத பிரச்னைகளால் இப்படம் கடந்த 8 வருடங்களாக திரைக்கு வராமல் இருந்தது. சமீபத்தில் இப்படத்தின் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, இ5 நிறுவனம் ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 27ம் தேதி ‘அடங்காதே’ படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ கிரீன் நிறுவனத்துக்காக சரவணன் தயாரித்துள்ளார்.