சென்னை: ஜோதிகா ‘சைய்யாரா’ என்ற இந்தி படத்தை பாராட்டுவது போல மற்ற படங்களை தாக்கி பதிவிட்டு இருக்கிறார்.‘‘இந்த காலத்தில் ஆக்ஷன் நிறைந்த படங்கள், ரத்தம் தெறிக்கும் காட்சிகள் உடன், ஐட்டம் பாடல்கள் உடன் வரும் நிலையில், இப்போது எமோஷன், இசை, மற்றும் நல்ல கதை உடன் ஒரு படம் வந்திருக்கிறது’’ என குறிப்பிட்டு சைய்யாரா படத்தை ஜோதிகா பாராட்டி இருக்கிறார்.
உடனே ரசிகர்கள் பலரும், ‘கங்குவா ரத்தம் தெறிக்கும் படம்தான், ரெட்ரோவும் நீங்கள் குறிப்பிடும் அதே வகை ஆக்ஷன் படம்தான். அதைத்தானே நாங்களும் விமர்சித்தோம். அதற்கு முன்பு கோபப்பட்டீர்களே’ என ஜோதிகாவை கலாய்த்து வருகிறார்கள். பலரும் ஜோதிகாவின் கருத்தை கடுமையாக விமர்சித்தும் பதிவிட்டு வருகிறார்கள்.
