ஆமிர் கானின் வீட்டுக்கு வந்த 25 ஐபிஎஸ் அதிகாரிகள்: பகீர் தகவல்

 

மும்பை: நடிகர் ஆமிர் கானின் வீட்டிற்கு வெளியே நேற்று காலை எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், போலீஸ் வாகனங்கள் அவரது வீட்டை விட்டு வெளியேறுவதைக் காண முடிகிறது. மும்பையின் பாந்த்ரா பகுதியில் ஆமிர் கானின் வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டில் இருந்து போலீஸ் ஜீப் ஒன்று முதலில் வெளியேறுகிறது. அதன்பின்னர் பெரிய போலீஸ் வேன் ஒன்றும் வெளியேறுகிறது.

தகவல்களின்படி சுமார் 25 ஐபிஎஸ் அதிகாரிகள் பாந்த்ராவில் உள்ள ஆமிர் கானை அவரது வீட்டில் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. எனினும் இந்த சந்திப்பு தொடர்பாக ஆமிர் கான் தரப்பில் எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஆமிர் கானின் டீமை தொடர்புகொண்டு விசாரித்ததில், ஐபிஎஸ் அதிகாரிகளின் திடீர் வருகைக்கான காரணம் குறித்து தங்களுக்குத் தெரியவில்லை என்றும் ஆமிர்கான் இனிமேல் சொன்னால்தான் தெரியும் என்றும் தெரிவித்தனர்.

Related Stories: