ஐஎம்டிபியில் 2வது இடம் பிடித்த கீனோ

சென்னை: கீனோ படத்தை ஜி.சி.சி. நிறுவனத்தின் சார்பில் கிருத்திகா காந்தி தயாரித்திருந்தார். டைரக்டர் கதிரிடம் உதவியாளராகவும் டைரக்டர் மிஸ்கினிடம் இணை இயக்குனராகவும் பணியாற்றிய ஆர்.கே.திவாகர் எழுதி, இசையமைத்து இயக்கியிருந்தார்.இதில் மஹாதாரா பகவத், ரேணுசதீஷ்.கோபிசெட்டி ,சுந்தர் அண்ணாமலை, சிவசுகந்த்,கண்ணதாசன், சிவம் ஆகியோர் நடித்திருந்தனர். ஒளிப்பதிவு: ஆலிவர் டெனி, எடிட்டிங்: கிருத்திகா காந்தி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களது மனதில் வெற்றிடத்தால் ஏற்படும் மனபயத்தை எப்படி போக்குவது என்பதை விளக்கும் கதையம்சம் கொண்ட படம் கீனோ. கற்பனைக்கதைகள் கொண்ட ஃபேன்டசி படங்களை வரிசைப்படுத்தினால் 1941 ல் வெளிவந்த சாவித்ரி. முதல் 2025ல் வெளி வந்த கீனோ படம் வரை 145 படங்களில் யூசர் ரேட்டிங் அடிப்படையில் கீனோ படத்திற்கு 10 -க்கு 9.2 மதிப்பெண் கிடைத்து தற்போது ஐஎம்டிபியில் 2 வது இடத்தில் உள்ளது.

Related Stories: