ரசிகர்களை மயக்கும் கிரித்தி ஷெட்டி

இந்தியில் ‘சூப்பர் 30’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கிரித்தி ஷெட்டி. அதன்பிறகு, தெலுங்கில் ‘உப்பெண்ணா’ என்ற படத்தில் பஞ்ச வைஷ்ணவ தேஜ் ஜோடியாக நடித்து கவனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து ‘ஷ்யாம் சிங்கா ராய்’, ‘பங்கார்ராஜு’, ‘வாரியர்’, ‘கஸ்டடி’ உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்தார். தற்போது தமிழில் கார்த்தியுடன் ‘வா வாத்தியார்’, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ மற்றும் ரவி மோகனுடன் ‘ஜீனி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விரைவில் இந்தியிலும் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார்.

இந்நிலையில், அவ்வப்போது கிளாமர் போட்டோஷூட் செய்து தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் கிரித்தி ஷெட்டி. சமீபத்தில் சிவப்பு நிற உடையில் அவர் பதிவிட்டிருக்கும் போட்டோ இணையத்தை கலக்கி வருகிறது. இதில் ”இன்று இந்த உலகில் எனக்கு கிடைத்த வாழ்க்கைக்கும், அதன் மூலம் கிடைத்த பாடங்களுக்கும், அன்பிற்கும் நன்றி கூறுகிறேன். அனைவருக்கும் பாசிட்டிவான விஷயங்கள் நடக்க வேண்டும்” என்று கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், விரைவில் நீங்கள் பான் இந்திய ஸ்டாராக மாறிவிடுவீர்கள் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories: