பாபி தியோலுடன் இணையும் ஸ்ரீலீலா

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங் தற்போது ‘துரந்தர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ‘டான் 3’ படத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், ரன்வீர் சிங் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாகவும் பாபி தியோல் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பணிகள் விரைவில் மும்பையில் உள்ள மெஹபூப் ஸ்டுடியோவில் தொடங்கவுள்ளது. ஸ்ரீலீலா தற்போது, இந்தியில் கார்த்திக் ஆர்யன் ஜோடியாக ‘ஆஷிக் 3’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதில் ஏற்பட்ட பழக்கத்தில் கார்த்திக் ஆர்யன், ஸ்ரீலீலா இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் கிசுகிசு பரவியது. தற்போது அடுத்ததாக ரன்வீர் சிங்குடன் சேர்ந்து அவர் நடிப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது கிலிம்ஸ் வீடியோ வெளியாக வாய்ப்புள்ளது. பாலிவுட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காம்போவான ரன்வீர் சிங், ஸ்ரீலீலா, பாபி தியோல் நடிக்கும் இப்படம் ஆக் ஷன் கலந்த என்டெர்டைன்மெண்ட் படமாக உருவாகும் என்று சொல்லப்படுகிறது.

Related Stories: