நான் பெரிய பாயா?.. ஏ.ஆர்.ரஹ்மான் திகைப்பு

 

சென்னை: ‘தக் லைஃப்’ படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் படத்தின் புரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கின்றது. படக்குழு அனைவரும் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஏ.ஆர். ரஹ்மானும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அந்த பேட்டியில் ஏ.ஆர். ரஹ்மான் தனது நிக்நேமை கேட்டு அதிர்ச்சியடைந்தார். தொகுப்பாளினி டிடி பேட்டி எடுக்கும்போது, ஏ.ஆர் ரஹ்மானை ‘பெரிய பாய்’ என அழைத்தார்.

உடனே ரஹ்மான், ‘பெரிய பாயா?’ என வியப்புடன் கேட்டார். அதற்கு டிடி, ‘அதுதான் சார் உங்களோட நிக்நேம், ரசிகர்கள் எல்லாம் உங்கள அப்படி தான் கூப்பிடுறாங்க’ என்றார். உடனே ஏ.ஆர் ரஹ்மான், ‘வேண்டாம், வேண்டாம், எனக்கு இந்த நிக்நேம் பிடிக்கல, நான் என்ன கசாப்பு கடையா வைத்திருக்கிறேன், சின்ன பாய், பெரிய பாய் என கூப்பிட?’ என சிரித்துக்கொண்டே கூறினார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Related Stories: