இதற்கிடையில் தமிழ் நடிகர் ஒருவரை நிதி அகர்வால் காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் பரவியது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் பேசும்போது, ‘‘தமிழில் ஜெயம் ரவியுடன் ‘பூமி’ படத்தில் நடிக்க கமிட்டான பிறகு சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இரண்டு படங்கள் வெளியாவதற்கு முன்பாகவே உதயநிதி ஸ்டாலினுடன் ‘கலகத் தலைவன்’ படத்தின் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.
திரைத்துறையில் நடிகர்களை பற்றி வதந்திகள் வருவது சகஜம்தான். அதிலும் திருமணம் குறித்து வரும் வதந்திகள் மீது மக்களுக்கும் ஆர்வம் அதிகமாக இருப்பதால் அது வேகமாக பரவுகிறது. அதை எல்லாம் நான் பொருட்படுத்தப் போவதில்லை. ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துவிட்டு அதன் பின்னர் திடீரென காணாமல் போவதற்கு நான் விரும்பவில்லை. பொறுமையாக காத்திருந்து நல்ல கதைகளையும், பெரிய நடிகர்களுடனும் நடித்து வருகிறேன்’’ என்று பேசியுள்ளார்.