தமிழுக்கு வரும் இலங்கை நடிகை

சென்னை: இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பூர்வீக தமிழ்க்குடி மக்களுக்கு இந்நாட்டில் குடியுரிமை வேண்டி, அகதிகளாக வந்தவர்களில் ஒரு பெண் தமிழ் மக்களின் ஆதரவுடன் தனிப்பெரும் போராட்டம் நடத்தி, இந்த விஷயத்தை ஆட்சியாளர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று குடியுரிமையை பெறும் கதையுடன் உருவாகியுள்ள படம், ‘இரவுப்பறவை’. கடலூர் கடற்கரை பகுதியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. தமிழ் திரை சேனல் சார்பில் வி.டி.ராஜா, ஆர்.பாண்டியன் இணைந்து தயாரித்துள்ளனர். வேதாஜி பாண்டியன் எழுதி இயக்கியுள்ளார். சத்யா, இலங்கையை சேர்ந்த நந்தினி, ‘நிழல்கள்’ ரவி, சிவா, டாக்டர் ஆர்.பாண்டியன், செல்வகுமாரன் நடித்துள்ளனர். பகவதி பாலா ஒளிப்பதிவு செய்ய, ஆல்வின் கலைபாரதி பாடல்கள் எழுதி இசை அமைத்துள்ளார். திகில் தங்கராஜ் சண்டை பயிற்சி அளித்துள்ளார். சென்சாரில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த படத்தை வரும் 27ம் தேதியன்று தமிழகம் முழு வதும் டாக்டர் ஆர்.பாண்டியன் புரொடக்ஷன்ஸ் வெளியிடுவதாக கூறியுள்ளனர்.

Related Stories: