சென்னை: தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் பேரன் ஆதித்யன், பிரித்திகா பாலாஜி திருமணம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. கவிதா நடராஜ், ஏ.கே.நடராஜ் தம்பதியின் மகனான ஆதித்யன், தாணுவின் பேரனாவார். இவருக்கும் ஜானகி பாலாஜி, பாலாஜி தம்பதியின் மகள் பிரித்திகா பாலாஜிக்கும் இன்று காலை சென்னையில் திருமணம் நடைபெறுகிறது. மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் பலரும் கலந்துகொண்டு வாழ்த்த உள்ளனர்.