மெட்ராஸ் மேட்னி: விமர்சனம்

வாழ்க்கை சம்பவங்களை கதையாக எழுதும் சத்யராஜ், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் காளி வெங்கட்டின் வாழ்க்கையை ஒரு கதையாக எழுத முடிவு செய்து, டாஸ்மாக் பாரில் அவரை சந்திக்கிறார். ஒரு கட்டத்தில் ஏற்படும் பிரச்னையில் காளி வெங்கட் குடும்பம் போலீஸ் வளையத்தில் சிக்குகிறது. இதனால் அவர்களுக்கு என்ன பிரச்னை ஏற்படுகிறது, மகளுக்கு திருமணம் நடந்ததா, சத்யராஜின் முயற்சிக்கு பலன் கிடைத்ததா என்பது மீதி கதை.
தனது அனுபவ நடிப்பில் மிளிர்கிறார் சத்யராஜ். யதார்த்தமாக நடித்துள்ளார் காளி வெங்கட். ஷெல்லி கிஷோர், சிறப்பு. விஷ்வா நடிப்பு அற்புதம்.

காளி வெங்கட்டின் நண்பராக வருபவர், அடிக்கடி கட்சி மாறும் கீதா கைலாசம், அவரது எடுபிடி ராமர், ஊறுகாய் விற்கும் சாம்ஸ், கார் டிரைவிங் கற்றுத்தரும் ஜார்ஜ் மரியான், சுனில் சுகாதா, மதுமிதா ஆகியோர் நிறைவாக நடித்துள்ளனர். எளிய மனிதர்களின் வாழ்க்கையை கண்முன் நிறுத்திய ஜி.கே.ஆனந்தின் ஒளிப்பதிவு சிறப்பு. கே.சி.பாலசாரங்கன் இசையில் வடிவேலுவின் பாடல் ஈர்க்கிறது. சொல்ல வந்ததை நேரடியாக சொல்லியிருக்கலாமே என்ற எண்ணத்தை சத்யராஜ் கேரக்டர் ஏற்படுத்துகிறது. நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி சொன்ன இயக்குனர் கார்த்திகேயன் மணி, திரைமொழியில் சொல்லாமல், நாடகத்தனமாக சொல்லியிருக்கிறார்.

Related Stories: