சென்னை: ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பறந்து போ’’. இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரைக்கு வருகிறது. சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார். இதன் முதல் சிங்கிள் ‘சன்ஃப்ளவர்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘கற்றது தமிழ்’, ‘தங்கமீன்கள்’ படங்களை தொடர்ந்து இப்படத்திற்காக சூரியகாந்தி தோட்டத்தில் ஒரு பாடலை படமாக்கியுள்ளார் இயக்குனர் ராம்.
ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ராம் தன்னுடைய செவன் ஹில்ஸ் செவன் சீஸ் நிறுவனம் மூலமாக தயாரித்துள்ளார். இந்நிலையில் டீசர் அண்மையில் யூடியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறும்பு செய்யும் மகன், அதை சமாளிக்கும் தந்தை என இந்த ‘பறந்து போ’ படத்தின் டீசர் அமைந்துள்ளது.