பேரன்பும் பெரும்கோபமும்: விமர்சனம்

தேனி அரசு மருத்துவ மனையில் முக்கிய தலைமை செவிலியராக பணியாற்றும் விஜித் பச்சான், குழந்தைகள் கடத்தல் தொடர்பாக கைதாகி போலீசாரால் விசாரிக்கப்படுகிறார். கிராமத்தில் பல வருடங்களுக்கு முன்பு வேறு சாதி பெண்ணை காதலித்ததற்காக, அந்த காதலனை ஊர் பெரும்புள்ளிகள் மைம் கோபி, அருள்தாஸ் கூட்டணி தீ வைத்து எரித்ததால், அப்பெண் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றித்திரிவது போலீசாருக்கு தெரியவருகிறது. விஜித் பச்சானும், கேரளாவின் கிறிஸ்தவ பெண் ஷாலி நிவேகாஸும் காதல் திருமணம் செய்த பிறகு பிரச்னையில் சிக்கிய விஷயமும் போலீசாருக்கு தெரிகிறது. இதையடுத்து போலீசாரிடம் விஜித் பச்சான் சொன்ன உண்மைகள் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அது என்னென்ன விஷயம், பிறகு ஷாலி நிவேகாஸ் என்ன ஆனார் என்பது மீதி கதை.

தனது கேரக்டரை உணர்ந்து விஜித் பச்சான் சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு நிகராக ஷாலி நிவேகாஸ் அசத்தலாக நடித்துள்ளார். வழக்கமான வில்லன்களாக மைம் கோபி, அருள்தாஸ், வில்லியாக சுபத்ரா ராபர்ட் நடித்துள்ளனர். மற்றும் கீதா கைலாசம், தீபா, சாய் வினோத், என்.பி.கே.எஸ்.லோகு, பவா செல்லத்துரை, வலீனா, ஹரிதா ஆகியோ ரும் இயல்பாக நடித்திருக்கின்றனர். இக்கதையை விறுவிறுப்பாக நகர்த்துவதற்கு ஜே.பி.தினேஷ் குமாரின் ஒளிப்பதிவு பேருதவி செய்திருக்கிறது. இளையராஜா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை யில் முத்திரை பதித்துள்ளார். பிறப்பால் அல்ல, வளர்ப்பால் மட்டுமே சாதிவெறி தலைதூக்குகிறது என்ற விஷயத்தை ஆணித் தரமாக சொல்லியிருக் கிறார், இயக்குனர் சிவபிரகாஷ். சாதி வெறியர் களுக்கான சாட்டையடி யாக அமைந்திருக்கும் இப்படத்தில் மெதுவாக நகரும் சில காட்சிகள் பலவீனம்.

Related Stories: